மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைவாரா பிரபல நடிகை?

  • IndiaGlitz, [Thursday,December 08 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'துப்பாக்கி' மற்றும் 'ஜில்லா' ஆகிய இரண்டு வெற்றிப் படங்களிலும் நாயகியாக நடித்த காஜல் அகர்வால், விஜய்யின் 61வது படத்திலும் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது காஜல் அகர்வால் அஜித்துடன் 'தல 57' படத்திலும், சிரஞ்சீவியுடன் 'கில்லாடி நம்பர் 150' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் 61' படத்தின் நாயகி போட்டியில் காஜல் அகர்வால் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாரா தான் நாயகி என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 'தல 57' படத்தின் தன்னுடைய பகுதி படப்பிடிப்பு முடிந்த பின்னரே காஜல் அகர்வால், விஜய் படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் உள்ளது. அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் ஆஸ்கார் நாயகன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜெயலலிதாவுக்கு இசைஞானியின் இசையஞ்சலி

தமிழக முதல்வராக இருந்து தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே...

ஜெயலலிதாவின் 'அந்த 73 நாட்கள்'. அப்பல்லோ ஊழியர்களின் மறக்க முடியாதஅனுபவம்

தமிழக முதல்வராக இருந்து கடந்த திங்கள் அன்று மறைந்த செல்வி ஜெயலலிதா, இரண்டு மாதங்களுக்கும் மேல் அதாவது 73 நாட்கள்...

ஜெயலலிதா என்னை ஜனாதிபதி ஆக்க விரும்பினார். பிரபல பாஜக பிரமுகர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல ஆண்டுகள் நண்பராகவும், சில ஆண்டுகள் எதிரியாகவும் இருந்த பாஜக பிரமுகர்...

முதல்வரோடு ஓடிய அப்பு இனி யாருக்காக ஓடுவார்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு, கருப்பு பூனை பாதுகாப்பு இருந்த போதிலும்...

ஜெயலலிதா இறக்கும் முன்னரே இரங்கல் தெரிவித்தாரா மோடி?

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த திங்கள் அன்று இரவு 11.30 மணிக்கு இறந்தார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.