காஜல் அகர்வால் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்!

  • IndiaGlitz, [Wednesday,August 21 2019]

காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கிய 'பாரீஸ் பாரீஸ்' திரைப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானபோது அதில் காஜல் அகர்வாலின் மார்பகத்தை அவருடைய தோழியாக நடித்திருக்கும் ஒரு நடிகை பிடிப்பது போன்ற காட்சி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

இந்த நிலையில் 'பாரீஸ் பாரீஸ்' திரைப்படம் சென்சாருக்கு சென்றபோது இந்த சர்ச்சைக்குரிய காட்சி உள்பட மொத்தம் 25 காட்சிகளை நீக்குமாறு சென்சார் போர்டு வலியுறுத்தியதை அடுத்து படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு செய்தனர்.

இந்த நிலையில் ரிவைசிங் கமிட்டியிலும் இந்த சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து வேறு வழியின்றி இந்த காட்சியை நீக்க படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 'குயீன்' ஒரிஜினல் படத்திலும், இந்த படத்தின் கன்னட, தெலுங்கு, மலையாள ரீமேக்கிலும் இந்த காட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில் தமிழில் மட்டும் இந்த காட்சி நீக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

மீண்டும் ஆரம்பம் கவின் - லாஸ்லியா காதல்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் பின்னர் இந்த காதலில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது.

வனிதா-கஸ்தூரி மோதல்: நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.

32 வருடங்கள் தந்த நிதானம்: கமலுக்கு நன்றி கூறிய விவேக்

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கடந்த 1987ஆம் ஆண்டு இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் விவேக்.

மீண்டும் அஜீத்துடன் மோதுகிறாரா அருண் விஜய்?

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இம்மாதம் 29ஆம் தேதி அவர் நடிக்கயிருக்கும் அடுத்த படமான 'தல 60' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது 

மதுமிதா மீது போலீஸ் புகார்: விஜய் டிவி அதிரடியால் பரபரப்பு

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா சமீபத்தில் நடந்த டாஸ்க் ஒன்றில் காவிரி பிரச்சினை குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார்.