'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால் கெட்டப் இதுதான்: வைரலாகும் புகைப்படம்!

  • IndiaGlitz, [Sunday,February 09 2020]

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கமலஹாசன் ஓய்வுக்குப் பின் தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு சுறுசுறுப்பாகி உள்ளது.

தற்போது சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமலஹாசன் மற்றும் காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது கெட்ட குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இருப்பினும் இந்த புகைப்படத்தில் காஜலின் முகம் தெரியவில்லை என்பதால் அவரது முழு கெட்டப் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் இந்த படம் அவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகிவரும் இந்த படம் 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல நீங்கள் யார்? டுவிட்டர் பயனாளியை வறுத்தெடுத்த டாப்சி

'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி அதன் பின்னர் 'வை ராஜா வை', ஆரம்பம்' உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது அவர் பாலிவுட்டில் பிசியான

ஏப்ரலில் கட்சி, பாமகவுடன் கூட்டணி: அதிமுகவின் முக்கிய தலைவர்கள் வருகை: ரஜினியின் மெகா திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் ஏப்ரலில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 

தர்ஷனிடம் பாடலை கடன் வாங்கிய கவின்!

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் புகழ் பெற்றிருந்தாலும் நடிகர் கவின், 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி மூலம் பெரும் புகழ் பெற்றார்.

உடல்நிலை தேறியவுடன் பரவை முனியம்மா பார்த்த முதல் படம் 

நடிகையும் கிராமப்புற பாடல்கள் பாடும் பாடகியுமான பரவை முனியம்மா கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்பதும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது

'நாடோடிகள் 2' படத்தால் அதுல்யாவுக்கு கிடைத்த பெஸ்ட் தோழி!

சமீபத்தில் வெளியான சமுத்திரகனியின் 'நாடோடிகள் 2' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரை அரங்குகளில் ஓடி வருகிறது.