close
Choose your channels

குழந்தை தத்தெடுக்கும் பிக்பாஸ் நடிகை

Monday, November 4, 2019 • தமிழ் Comments

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் தற்போது பிசியாக உள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த நடிகையும் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் தனக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசையை தனது டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் மணப்பாறை அருகே சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான நிலையில் அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய ராகவா லாரன்ஸ், ஒரு குழந்தையை தத்தெடுத்து சுஜித் என்று பெயரிட்டு வளர்க்குமாறு ஆலோசனையும் கூறினார்.

ராகவா லாரன்ஸ்ஸின் இந்த ஆலோசனையை பார்த்த நடிகை காஜல், தனக்கு ஒரு குழந்தையை தத்தெடுக்க உதவி செய்யுமாறும் அவ்வாறு உதவி செய்தால் அந்த குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதோடு, இந்த உதவியை செய்த ராகவா லாரன்ஸ்ஸுக்கு காலம் முழுவதும் நன்றியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். காஜலுக்கு ராகவா லாரன்ஸ் இந்த விஷயத்தில் உதவி செய்வார் என்றே தெரிகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz