சமுத்திரக்கனியின் அடுத்த படத்தில் 'காக்கா முட்டை' சிறுவன்?

  • IndiaGlitz, [Saturday,November 21 2015]

தற்போது கோலிவுட் திரையுலகில் இரண்டாம் பாக சீசன் களைகட்டியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அஜீத்தின் பில்லா 2' படத்தில் தொடங்கி விரைவில் ஆரம்பமாகவுள்ள 'எந்திரன் 2' வரை அனைத்து இரண்டாம் பாக படங்களும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது தற்போது சமுத்திரக்கனியின் 'சாட்டை' படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

அறிவழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனியின் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த 'சாட்டை' திரைப்படம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்க சமுத்திரக்கனி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சமுத்திரக்கனியுடன் முதல் பாகத்தில் நடித்த தம்பி ராமையாவும் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் 'காக்கா முட்டை' படத்தில் நடித்த தேசிய விருது பெற்ற சிறுவனுக்கும் முக்கிய கேரக்டர் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

More News

'வேதாளம்' போன்ற படத்தை எடுக்க மாட்டேன். கெளதம் மேனன்

கடந்த தீபாவளி தினத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடிப்பில் சிவா இயக்கிய 'வேதாளம்' சூப்பர் ஹிட் ஆகி ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ள...

'விஜய் 60' படத்தின் பூஜை நாள்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று...

இசைஞானிக்கு மத்திய அமைச்சர் கொடுத்த மதிப்பு மிகுந்த விருது

1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து கின்னஸ் சாதனை செய்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இன்று சிறந்த திரைப்பட கலைஞருக்கான நூற்றாண்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது...

விஜய் 60' வாய்ப்பு அஜித்தால் கிடைத்ததா?

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 'விஜய் 60' படத்தை இயக்கும் வாய்பை பெற்ற 'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன்...

4வது முறையாக விஜய்யுடன் இணையும் பரதன். புதிய தகவல்

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 60வது படமான 'விஜய் 60' படத்தை பரதன் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...