close
Choose your channels

'காலா' நடிகை ஈஸ்வரிராவ் கணவர் ஒரு இயக்குனரா? அர்ஜூனின் இத்தனை படங்களை இயக்கியுள்ளாரா?

Sunday, March 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’காலா’ என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ஈஸ்வரி ராவின் கணவர் எல்.ராஜா என்பவர் ஒரு இயக்குனர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர் அர்ஜுன் நடித்த ’சங்கர் குரு’ ’தாய் மேல் ஆணை’ ’சொந்தக்காரன்’ ஆகிய மூன்று படங்களையும் ரகுவரன் நடித்த ’குற்றவாளி’, ‘தூள் பறக்குது ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள் மட்டுமின்றி பல சீரியல்களையும் இவர் இயக்கியுள்ளார். ‘பிரிவோம் சந்திப்போம்’ ’உதிரி பூக்கள்’ ’தாமரை’ உள்பட பல சீரியல்களை இயக்கி உள்ளார் என்பதும், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சுந்தரி’ என்ற சீரியலையும் இவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ராஜா நடிகை ஈஸ்வரிராவை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.