close
Choose your channels

கலைஞானத்திற்கு கொடுத்த வீடு லதா ரஜினி பெயரில் உள்ளதா?

Tuesday, October 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னை முதன்முதலாக ஹீரோவாக்கி அழகு பார்த்த பழம்பெரும் தயாரிப்பாளர் கலைஞானம் அவர்களுக்கு வீடு ஒன்றை பரிசாக அளித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ரஜினிகாந்த், கலைஞானம் அவர்களுக்கு கொடுத்த வீடு அவரது மனைவி லதா ரஜினிகாந்த் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கலைஞானம் தனது வாழ்நாள் வரை வாழ்வதற்கு மட்டுமே அந்த வீடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது காலத்திற்குப் பின் லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு அந்த வீடு வந்து விடும் என்று ஒரு வதந்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் இந்த வதந்தியை மறுத்த கலைஞானம் அவர்கள், என் விருப்பப்படியே வீடு வாங்கிக் கொடுத்த ரஜினிகாந்த், என்னுடைய குடும்பத்தின் பெயரில்தான் அந்த வீட்டை பதிவு செய்துள்ளார். எனவே தயவு செய்து யாரும் வதந்தியைப் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ரஜினிகாந்த், கலைஞானம் அவர்களுக்கு கொடுத்த வீடு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.