கலைஞானத்திற்கு கொடுத்த வீடு லதா ரஜினி பெயரில் உள்ளதா?

  • IndiaGlitz, [Tuesday,October 15 2019]

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னை முதன்முதலாக ஹீரோவாக்கி அழகு பார்த்த பழம்பெரும் தயாரிப்பாளர் கலைஞானம் அவர்களுக்கு வீடு ஒன்றை பரிசாக அளித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ரஜினிகாந்த், கலைஞானம் அவர்களுக்கு கொடுத்த வீடு அவரது மனைவி லதா ரஜினிகாந்த் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கலைஞானம் தனது வாழ்நாள் வரை வாழ்வதற்கு மட்டுமே அந்த வீடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது காலத்திற்குப் பின் லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு அந்த வீடு வந்து விடும் என்று ஒரு வதந்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் இந்த வதந்தியை மறுத்த கலைஞானம் அவர்கள், என் விருப்பப்படியே வீடு வாங்கிக் கொடுத்த ரஜினிகாந்த், என்னுடைய குடும்பத்தின் பெயரில்தான் அந்த வீட்டை பதிவு செய்துள்ளார். எனவே தயவு செய்து யாரும் வதந்தியைப் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ரஜினிகாந்த், கலைஞானம் அவர்களுக்கு கொடுத்த வீடு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More News

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்து மாஸ் அப்டேட்

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் 'பூமி' மற்றும்' ஜனகனமன' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் 

விக்ரம் அடுத்த படத்திலும் இணைந்த ஒரு கிரிக்கெட் பிரபலம்

சந்தானம் நடித்து வரும் 'டிக்கிலோனா' திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானதை சற்றுமுன் பார்த்தோம்.

'மிக மிக அவசரம்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுரேஷ் காமாட்சி இயக்கிய 'மிக மிக அவசரம்' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் திடீரென 'அருவம்' மற்றும் 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகியதால்

என் பின்னாடி லோலோன்னு அலைஞ்சவங்க தான் அந்த நாலு பையன்களும்! மீராமிதுன்

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுன் இன்று காலையிலிருந்தே சமூக வலை தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே.

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்!

நடிகர் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2', 'ஏ1' ஆகிய படங்கள் தொடர் வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது அவர் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்திலும், கார்த்தில் யோகி இயக்கும் 'டிக்கிலோனா' என்ற நடித்து வருகிறார்