எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர் கருணாநிதி: கமல்ஹாசன் புகழாரம்

  • IndiaGlitz, [Sunday,May 28 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து பரபரப்பாக தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கமல் தெரிவித்துள்ளார். கருணாநிதி தன்னைவிட வயதில் மூத்தவராக இருந்தாலும் வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை என்றும், தமிழ் உணர்வு இருந்தால் போதும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர்கள் கருணாநிதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன் ஆகியோர்கள் என்றும் கருணாநிதியின் வசனங்களை பேசிவிட்டால் ஒரு நடிகர் முழு தகுதி பெற்றவராகிறார் என்றும் கூறிய கமல், அரசியலையும் தாண்டி பல்வேறு துறைகளில் தனது முத்திரையை பதித்த கருணாநிதி சிறந்த திரைக்கதை ஆசிரியர், வசனம் எழுதக் கூடியவர் என அவருக்கு புகழாரம் சூட்டினார்.

தசாவதாரம் படத்திபோது கருணாநிதி கையால் கிள்ளப்பட்ட கன்னம் என் கன்னம் என்று கூறிய கமல், சட்டப்பேரவையில் வைரவிழா காணும் கருணாநிதிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

More News

18% ஜிஎஸ்டி வரியை எதிர்த்து குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்

சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் பொதுமக்கள் குடிநீர் கேன்களையே குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர்...

சிறுவயது தோழனுக்கு ஜோடியாக நடிக்கும் நிக்கி கல்ராணி

'டார்லிங்' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் 'யாகாவராயினும் நாகாக்க', 'கோ 2', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', உள்பட பல திரைப்படங்களில் நடித்து கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகை நிக்கி கல்ராணி...

சினிமா எல்லாம் அப்புறம்தான்! முதல்ல விவசாயம்: 'விவேகம்' வெற்றி

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி, இதற்கு முன்னர் 'வேங்கை', 'வீரம்', 'வேதாளம்' உள்பட ஒருசில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் என்ற வகையில் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு விவசாயி, விவசாயிகளுக்காக போராடுவதற்கு என்றே ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் என்பது பலரும் அறியாத உண்மை...

பிரபல நடிகரின் சாதனையை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

உலகின் பல நாடுகளில் வெளியாகி ரூ.700 கோடி வசூலாகி சாதனை செய்த நிலையில் சமீபத்தில் இந்த படம் சீனாவில் வெளியானது...

தனுஷ் வெளியிட்ட 'சன்பெண்ட் ஆர்டர்'

தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள 'காலா' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் தொடங்குகிறது...