close
Choose your channels

'நானே வருவேன்' படத்தின் ரிலீஸ் அப்டேட்: கலைப்புலி எஸ் தாணு அறிவிப்பு

Monday, September 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 06.20 மணிக்கு இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தெரிவித்து இருந்தார் என்று ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் கலைப்புலி தாணு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ’நானே வருவேன்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்டை தெரிவித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த போஸ்டரை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. இந்த போஸ்அரில் வரும் 7ஆம் தேதி சிங்கிள் பாடல் ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ’நானே வருவேன்’ திரைப்படத்தில் தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய ஒரு படம் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.