வெற்றி விழா மேடையில் இயக்குனருக்கு அடுத்த பட அட்வான்ஸ் கொடுத்த தாணு!

அறிமுக இயக்குனர் இயக்கிய திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடிய போது அந்த வெற்றி விழா மேடையிலேயே இயக்குநரின் அடுத்தப் படத்திற்கான அட்வான்சை கலைப்புலி எஸ் தாணு கொடுத்துள்ளார்.

அறிமுக இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ’செல்பி’. இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், இந்த படம் நல்ல லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்ட போது அந்த வெற்றி விழா மேடையிலேயே தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மதிமாறன் இயக்க வேண்டும் என பத்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு.

மேலும் அவர் இந்த விழாவில் பேசியபோது, ‘செல்பி’ இயக்குனர் மதிமாறனை எனக்கு கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி என்றும் 38 நாட்களில் இந்த படத்தை சிறப்பாக மதிமாறன் எடுத்துக் கொடுத்ததற்காக அவரை நிறைய பாராட்டலாம் என்றும், இந்த படம் தனக்கு மிகப்பெரிய லாபம் ஈட்டியது என்றும், அதனால் அவருக்கு எங்கள் நிறுவனம் தயாரிக்க இருக்கும் அடுத்த படத்திற்கான அட்வான்ஸாக ரூ.10 லட்சம் கொடுக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.

More News

விஜய் படத்தில் இணையும் 'கேஜிஎஃப் 2' பிரபலம்: இதைத்தான் எதிர்பார்த்தோம்!

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் 'கேஜிஎப் 2' படத்தில் நடித்த பிரபல நடிகர் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து 'இதைத்தான் எதிர்பார்த்தோம்' என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கில் ரீமேக் ஆகிறதா விஜய்யின் சூப்பர்ஹிட் படம்?

தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கர்ப்பமான நிலையிலும் செம ஆட்டம் போடும் தமிழ் திரைப்பட நடிகை: வைரல் வீடியோ

 சூர்யா, கார்த்தி படங்கள் உள்பட ஒருசில படங்களில் நடித்த தமிழ் நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் செம டான்ஸ் ஆடி உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின் பாதை மாறும் விஜய்: ரசிகர்களுக்கு ஏமாற்றமா? கொண்டாட்டமா?

தளபதி விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு பாதை மாற இருப்பதாகவும் அதனால் ஆக்சன் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் இன்னொரு பக்கம் ரசிகர்கள் புதிய அவதாரத்தில் விஜய்யை

160 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகும் படம்: ஆச்சரியத்தில் சினிமா ரசிகர்கள்!

உலகம் முழுவதும் 160 மொழிகளில் சூப்பர்ஹிட்டான திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.