close
Choose your channels

கலைப்புலி எஸ்.தாணுவின் 'இந்திரஜித்' திரை முன்னோட்டம்

Thursday, November 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் தளபதி விஜய் நடித்த 'தெறி' ஆகிய இரண்டு பெரிய சூப்பர்ஹிட்டை கடந்த ஆண்டு கொடுத்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் அடுத்த படைப்பு இந்திரஜித். அதேபோல் 'இவன் தந்திரன்',  ஹரஹர மகாதேவகி' ஆகிய இரண்டு வெற்றி படங்களுக்கு பின்னர் இந்த படம் கவுதம் கார்த்திக்கு ஹாட்ரிக் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முன்னோட்டம் குறித்து தற்போது பார்ப்போம்

கவுதம் கார்த்திக், சோனாரிகா, அஷ்ரிதா ஷெட்டி, சுதான்ஷூ பாண்டே, பிரதாப் போத்தன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலாபிரபு இயக்கியுள்ளார். கேபி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவும், விடி விஜயன், கணேஷ்பாபு ஆகியோர் படத்தொகுப்பு பணியும் புரிந்துள்ளனர். ஒரு புதையலை தேடி, சென்னையில் இருந்து கோவா செல்லும் ஒரு குழுவை பற்றிய கதை இது. புதையலை தேடி அலையும்போது அந்த குழுவினருக்கு ஏற்படும் அனுபவங்கள்தான் திரைக்கதை. அவர்கள் புதையலை கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.

கடந்த 2013ஆம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்ட இயக்குன கலாபிரபு, பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பை ஒத்தி வைத்து இந்த ஆண்டுதான் படத்தை முடித்துள்ளார். இவர் ஏற்கனவே தாணுவின் தயாரிப்பில் சாந்தனு நடித்த 'சக்கரக்கட்டி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் காவியத்தில் இடம்பெற்ற இந்திரஜித் என்ற கேரக்டரின் பெயரில் உருவாகியுள்ள இந்த படம் செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' போன்ற ஒரு ஃபேண்டஸி கதை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரில் இருந்து இந்த படம் அடர்த்தியான காடுகளில் வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. வரும் 24ஆம் திரைக்கு வரும் இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை இந்த படத்தின் திரை விமர்சனத்தின்போது பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.