கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படத்தின் அப்டேட்!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைபுலி எஸ் தாணு அவர்களின் அடுத்த படத்தின் அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ’செல்பி’ என்பதும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் இயக்குனர் கவுதம் மேனன், வர்ஷா பொம்மலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மதிமாறன் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என்றும் இந்த பாடலை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு திரைப்படமான ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

தென்னிந்தியா என்ன வேற்று கிரகமா? ஸ்ருதிஹாசனின் காட்டமான பதில்!

தென்னிந்தியாவிலிருந்து வந்த நீங்கள் எப்படி சரளமாக இந்தி பேசுகிறீர்கள் என்ற கேள்விக்கு தென்னிந்தியா என்ன வேற்றுக்கிரகமா? என நடிகை ஸ்ருதிஹாசன் பதிலடி கொடுத்துள்ள தகவல்

கொரோனாவை ஒழிக்க இந்திய விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி உலகமே தலைகீழாக மாறியிருக்கிறது.

வெட்டப்பட்ட மனைவியின் தலையோடு சாலையில் உலா வந்த கணவன்… உறைய வைக்கும் சம்பவம்!

ஈரான் நாட்டில் இளைஞர் ஒருவர் தன்னுடைய இளம் மனைவியின் தலையை

சிவகார்த்திகேயனின்  “SK 20” படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும்  “SK 20”படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அஜித்தின் 'வலிமை' படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஹூமா குரேஷி!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் இந்திய திரையுலகமே மிகப் பெரிய