சென்னை பாக்ஸ் ஆபீசை கலக்கி வரும் கலகலப்பு2 - நாச்சியார்

  • IndiaGlitz, [Monday,March 19 2018]

மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய திரைப்படங்கள் வெளிவராததால் ஏற்கனவே வெளிவந்த சுந்தர் சியின் 'கலகலப்பு 2 மற்றும் ஜோதிகாவின் 'நாச்சியார்' ஆகிய படங்கள் சென்னையில் இன்னும் வெற்றிநடை போட்டு வருகிறது.

சுந்தர் சியின் 'கலகலப்பு 2' திரைப்படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகி நேற்று வரை சென்னையில் மட்டும் ரூ.4,76,33,735 வசூலாகியுள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் ரூ.5 கோடி வசூலை நெருங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜோதிகாவின் 'நாச்சியார் திரைப்படம் பிப்ரவரி 16ஆம் தேதி ரிலீஸ் ஆகி நேற்று வரை ரூ.2,62,90,446 சென்னையில் மட்டும் வசூலாகியுள்ளது. இந்த படமும் விரைவில் ரூ.3 கோடி இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இரண்டு திரைப்படங்களும் 60 முதல் 65 சதவிகித பார்வையாளர்களை மட்டுமே கொண்டுள்ளதால் விரைவில் வேலைநிறுத்தம் முடிந்து புதிய திரைப்படங்கள் வெளியாக வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது.

More News

ஒரே சிக்ஸில் ஹீரோவாக மாறிய தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழர்கள் இடம்பிடிப்பது ஒரு காலத்தில் அரிதாக இருந்தது. ஆனால் தற்போது இந்திய அணியின் வெற்றியை நிர்ணயிப்பதே நம்ம தமிழக வீரர்கள் என்பது அவ்வப்போது நிரூபணம் ஆகி வருகிறது.

தினேஷ் கார்த்திக்கை பாராட்டாத முரளிவிஜய்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

தமிழகத்தை சேர்ந்த இன்னொரு கிரிக்கெட் வீரரான முரளிவிஜய், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்று தனது டுவிட்டில் பதிவு செய்துள்ளார்.

மருத்துவமனையில் நடராஜன் அனுமதி: சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்யுடன் 'தளபதி 62', விக்ரமுடன் 'சாமி 2', விஷாலுடன் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள படம் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

ஆரம்பமானது நயன்தாராவின் அடுத்த மெகா பட்ஜெட் படம்

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து பிசியான நடிகையாக உள்ளார்.