close
Choose your channels

ஆஷ்னா ஜாவேரியின் மீன்குழம்பு சமையல் ஆரம்பம்

Wednesday, December 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்தமகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த், 'ஈஷான் புரடொக்ஷன்ஸ்' என்று புதிய பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும், இந்த நிறுவனத்தின் மூலம் அவர் தயாரிக்கவிருக்கும் முதல் படத்திற்கு 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆசி வழங்கியதையும் ஏற்கனவே பார்த்தோம்.,


இந்நிலையில் 'மீன் குழம்பும் மண்பானையும்' என்ற இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் மற்றும் சந்தானத்துடன் 'இனிமே இப்படித்தான்' என்ற படத்தில் நடித்த நடிகை ஆஷ்னா ஜாவேரி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

முதல்கட்ட படப்பிடிப்பில் காளிதாஸ், ஆஷ்னா ஜாவேரி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை அமுதேஷ்வர் என்பவர் இயக்க டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.