close
Choose your channels

'விக்ரம்' படத்தில் கமல் மகனாக நடிக்கும் இளம் ஹீரோ!

Monday, July 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் தொடங்கிய முதல் நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்த காட்சிகள் படமாக்கப்பட்டது என்பதும் தற்போது கமல்ஹாசன் மற்றும் பகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’விக்ரம்’ படத்தில் இளம் ஹீரோ ஒருவர் இணைந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ’விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனின் மகனாக இளம் ஹீரோ காளிதாஸ் ஜெயராம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் விக்ரம் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ’விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், அர்ஜூன் தாஸ், நரேன் ஆகிய பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த பட்டியலில் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.