close
Choose your channels

கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம்: 'குக் வித் கோமாளி' அஸ்வின் ஹீரோவா?

Wednesday, May 5, 2021 • தமிழ் Comments

நடிகரும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி கடந்த 2013ஆம் ஆண்டு ’வணக்கம் சென்னை’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது தெரிந்ததே. சிவா மற்றும் ப்ரியா ஆனந்த் நடித்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும், இதனை அடுத்து அவர் விஜய் ஆண்டனி நடித்த ’காளி’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் இயக்க உள்ள மூன்றாவது படம் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த படத்தில் ’குக் வித் கோமாளி’ அஸ்வின் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது முழுக்க முழுக்க வதந்தி என்றும் இந்த படத்தில் நாயகனாக காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் காளிதாஸ் ஜெயராம் தனது தந்தை நடிகர் ஜெயராம் உடன் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz