'மாநாடு' படத்தின் அடுத்தகட்ட பணியை தொடங்கிய நாயகி கல்யாணி!

  • IndiaGlitz, [Wednesday,June 23 2021]

சிம்பு நடித்துவரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துவிட்டதாகவும் இன்னும் இரண்டு நாள் படப்பிடிப்பு மட்டுமே உள்ளது என்பதும் அந்த படப்பிடிப்பும் இன்னும் ஒரு சில நாளில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் சமீபத்தில் ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ’மாநாடு’ படத்தின் அடுத்த கட்ட பணிகள் தொடங்கியுள்ளன

’மாநாடு’ படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும் முதல் கட்டமாக இந்த படத்தில் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் தனது பகுதியின் டப்பிங் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த புகைப்படம் ஒன்றை கல்யாணி பிரியதர்ஷன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது இஒணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெங்கட் பிரபு இயக்கிய ’மங்காத்தா’ படத்தின் பட்ஜெட்டை விட ’மாநாடு’ படத்தின் பட்ஜெட் அதிகம் என்று சமீபத்தில் அவர் கூறிய நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படம் ஆயுதபூஜை விடுமுறையின்போது வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'மாஸ்டர்' சாதனையை முறியடித்தது 'பீஸ்ட்'!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் சாதனையை அவரது அடுத்த திரைப்படமான 'பீஸ்ட்'முறியடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் பிறந்த நாளில் 200 குடும்பங்களுக்கு நிவாரண உதவி செய்த ரசிகர்கள்!

தளபதி விஜய்யின் 47-வது பிறந்த நாள் நேற்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் சமூக வலைதளங்கள் மூலம் விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது

சூதாட்டகாரர்களிடம் சூசகமாக காசு வாங்கிய போலீஸ் சஸ்பெண்ட்...!

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் லஞ்சம் வாங்கிய கோவை போலீஸ் அதிகாரி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அட்டகாசமான மேஜிக் ஷாட்ஸ்: ரம்யா பாண்டியனின் வைரல் வீடியோ!

நேற்று உலக யோகா தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நடிகையையும் பிக்பாஸ் போட்டியாளருமான ரம்யா பாண்டியன் கடற்கரையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி வந்தார் எ

விஜய் பிறந்த நாள்: நடுக்கடலில் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்!

தளபதி விஜயின் பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களால் கொண்டாடப்ய்படுகிறது என்பதும், சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே.