நயன்தாராவும் இல்லை, த்ரிஷாவும் இல்லை.. கமலுக்கு ஜோடி இந்த அஜித் பட நாயகி தான்..!

  • IndiaGlitz, [Friday,April 28 2023]

உலகநாயகன் கமல்ஹாசனின் 234 வது திரைப்படத்தை மணிரத்னம் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா மற்றும் த்ரிஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’கமல் 234 ’வருடத்தில் நாயகி ஆக நடிப்பது நயன்தாராவும் இல்லை, த்ரிஷாவும் இல்லை, அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் நடித்த நடிகை தான் என்று கூறப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கமல்ஹாசன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படங்களில் ஒன்று மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல் 234’.

இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் மணிரத்னம் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் படத்தின் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்றும் முதல் முறையாக அவர் கமலஹாசனுடன் ஜோடி சேர உள்ளதாகவும் கூறப்பட்டது. அதேபோல் கமல்ஹாசனுடன் ஏற்கனவே ’மன்மதன் அன்பு’ ’தூங்காவனம்’ ஆகிய படங்களில் நடித்த த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற தமிழ் படத்திலும் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்த வித்யா பாலன் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுமை காப்போம்

More News

ஷிவானி, லாஸ்லியாவுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு.. வழக்கறிஞர் எச்சரிக்கை..!

 ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களில் நடித்து வரும் நடிகைகள் ஷிவானி, லாஸ்லியாவுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சியில் இணையும் 'ஜெயிலர்', 'கேப்டன் மில்லர்' பட நடிகரின் மனைவி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்', தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்.

மதுராந்தகம் தியேட்டரை ஜொலிக்க வைத்த கலைப்புலி தாணு : 'PS 2' படத்திற்காக சிறப்பு ஏற்பாடு..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஏராளமான ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்

போன்ல டைம் டிராவலா? புதுசா இருக்கே.. 'மார்க் ஆண்டனி' டீசர்..!

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

'லால் சலாம்' படத்தின் 50 நிமிட காட்சிகளை பார்த்த ரஜினி.. என்ன சொன்னார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இதனை அடுத்து படக்குழுவினர்களுக்கு அவர்