'கமல் 234' படத்தின் நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,November 06 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல் 234’ படத்தின் டைட்டில் இன்று வெளியாக இருப்பதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் துல்கர் சல்மான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்த அறிவிப்பின்படி இந்த படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் ’கமல் 234’ படத்தில் இணைந்ததை உறுதி செய்துள்ளார்.

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகிய இருவருடன் மீண்டும் இணைவதில் தனக்கு த்ரில்லாக இருக்கிறது என்றும் தனது கனவு நனவாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசனுடன் த்ரிஷா, ‘மன்மதன் அம்பு’ மற்றும் ‘தூங்காவனம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பதும் அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் த்ரிஷா, ‘பொன்னின் செல்வன்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்த படத்தில் த்ரிஷா இணைந்துள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்-மணிரத்னம் படத்தில் இணைந்த பிரபல ஹீரோ.. பான் - இந்தியா படமாக்க முயற்சியா?

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் 'கமல் 234'. இந்த படத்தின் போஸ்டர் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு

நடிகை ராஷ்மிகா மந்தனா வீடியோ.. கடும் கண்டனம் தெரிவித்த அமிதாப் பச்சன்..!

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த வீடியோவுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'KH234' போஸ்டரில் உள்ள பாரதியார் கவிதையை கவனித்தீர்களா?  என்ன சொல்ல வருகிறார் மணிரத்னம்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கமல்ஹாசன் 234' திரைப்படத்தின் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம்.

நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சமில்லை: கமலுக்கு வாழ்த்து கூறிய சீனியர் நடிகர்..!

நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாக தெரியவில்லை என சீனியர் நடிகர் ஒருவர் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்மால் ஹவுஸ் வீட்டுக்கு மாயா அனுப்பிய 6 போட்டியாளர்கள்.. பக்கா பிளானா?

இந்த வார கேப்டனாக மாயா தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் 6 போட்டியாளர்களை தேர்வு செய்து ஸ்மால் ஹவுஸ் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.