’பிக்பாஸ் நிகழ்ச்சியால் தாமதமாகுமா ‘கமல் 233’ படப்பிடிப்பு.. ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,September 28 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் அவரது 233 படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகுமா என்றால் அது தான் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி மூன்று மாதம் அதில் கமல்ஹாசன் பிசியாக இருந்தாலும் இடையிடையே அவர் ’கமல் 233’ படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளார்.

நவம்பர் முதல் வாரம் ’கமல் 233’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே சனி ஞாயிறு மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்திய ராணுவத்தின் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தில் 2 பான் இந்திய நடிகர்கள் இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் மற்றும் எச் வினோத் ஆகியோர் எழுதியுள்ள கதைக்கு திரைக்கதை அமைத்து எச் வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது

More News

'லியோ' ஆடியோ நிகழ்ச்சியை அடுத்து மேலும் ஒரு நிகழ்ச்சி ரத்து.. மன்னிப்பு கேட்ட பிரபலம்..!

சமீபத்தில் தளபதி விஜய் நடித்த 'லியோ' ஆடியோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும்

ரிஷிகேஷை அடுத்து ரம்யா பாண்டியன் சென்ற உலகப்புகழ்பெற்ற புனித தலம்.. வைரல் வீடியோ..!

நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் இமயமலை அருகே உள்ள ரிஷிகேஷ் சென்றார் என்பதும் அங்கிருந்து அவர் பதிவு செய்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

சாலை விபத்தில் இறந்த ரசிகர்.. நேரில் சென்று இரங்கல் தெரிவித்த சூர்யா..!

நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சமீபத்தில் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு சூர்யா சென்று அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறிய

ஆடியோ லாஞ்ச் இல்லைன்னா என்ன? ஆட்சியை பிடிப்போம்.. விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

கிங் ஆஃப் கொத்தா - செப்டம்பர் 29, 2023 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது

இயக்குநர்  அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி முதன்மை பாத்திரத்தில் நடிக்க,  பிரசன்னா, ஷபீர் கல்லாரக்கல், கோகுல் சுரேஷ், நைலா உஷா, அனிகா சுரேந்திரன்