close
Choose your channels

ஒரே நேரத்தில் இரண்டு இரட்டை வேட படங்களில் கமல்ஹாசன்?

Monday, July 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்காவின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ள இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் முதல் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் கமலஹாசன் சமீபத்தில் 'தலைவன் இருக்கின்றான்' என்ற படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து உள்ளதாகவும் அவருடன் மீண்டும் இணைந்து பணிபுரிவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் கமல் தெரிவித்திருந்தார்

'தலைவன் இருக்கின்றான்' படத்தில் பாலிவுட் நடிகர் சயீப்அலிகான், அமீர் கான் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் கமலஹாசன் இந்தப் படத்தில் கதாநாயகன் , வில்லன் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

ஒரு சீரியஸான அரசியல் கதையம்சம் கொண்ட இந்தப் படம் கமல்ஹாசனின் திரையுலக வாழ்வில் மட்டுமின்றி அரசியல் வாழ்க்கைக்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.