கமல்-ஸ்ரீவித்யா காதல் உண்மையா? இருவரும் மாறி மாறி கொடுத்த பேட்டியின் பழைய வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,January 01 2024]

தமிழ் திரை உலகம் பல நட்சத்திர காதல்களை பார்த்துள்ளது என்பதும் பல காதல்கள் திருமணத்தில் முடிந்து வெற்றி அடைந்துள்ள நிலையில் சில காதல் திருமணத்தில் முடியாவிட்டாலும் மாறாத வடுவாக நினைவு அலைகளாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா ஆகிய இருவரும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் எதிர்பாராத வகையில் பிரிந்து தனித்தனியாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கமல், ஸ்ரீவித்யா காதல் குறித்து இருவரும் தனித்தனியாக அளித்த பேட்டியின் பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கமல் உடனான காதல் குறித்து ஸ்ரீவித்யா பேசியபோது ’நானும் கமலும் காதலித்தது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் தெரியும். எங்கள் இரண்டு குடும்பத்திற்கும் தெரியும். ஆனால் ஒருநாள் என் அம்மா எங்கள் இருவரையும் அழைத்து உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது, காதல் எல்லாம் வேண்டாம் என்று சொன்னதால் கமலுக்கு கோபம் வந்தது. அதன் பின்னர் அவர் என்னிடம் நீண்ட நாட்களாக பேசவில்லை. திடீரென ஒரு நாள் அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக கேள்விப்பட்டவுடன் நான் அவரை முற்றிலும் இழந்து விட்டேன் என்பதை அறிந்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமல்ஹாசன் அளித்த பழைய பேட்டியில் ஸ்ரீவித்யாவுடன் நடித்த படம் குறித்த புகைப்படத்தை குறிப்பிட்டு ’இந்த படம் நடித்துக் கொண்டிருந்தபோது எனக்கு 19 வயது. அப்போது நான் திறமையானவன் என்பதை கண்டுபிடித்த எனது அன்பு தோழி என்று கூறுவதை விட காதலி என்று கூறலாம். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்த படத்தில் அமைந்த பாத்திரங்கள் காரணமாக எங்களுக்குள் காதல் மலர்ந்ததா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் மறுக்க முடியாமல் இருவருக்கும் அது கடைசி வரை இருந்தது. காதல் கல்யாணத்தில் தான் முடிய வேண்டும் என்று அவசியம் இல்லை, எனக்கு மிகவும் முக்கியமான ஒரு கதாநாயகி’ என்று கமல் தெரிவித்தார். இந்த இரண்டு வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

'ரத்தக்களறி யுத்தம் தொடங்கிவிட'.. விஷால் படத்திற்காக தேவிஸ்ரீ பிரசாத் கம்போஸ் செய்த பாடல்..!

விஷால் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ரத்னம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எதிர்பார்த்த அதே டைட்டில் தான்: 'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று

அய்யா யார்? ஜெய் நீதிபதி ஆனாரா? 'லேபிள்' வெப்தொடரின் கடைசி எபிசோடு..!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவான 'லேபிள்' என்ற வெப் தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் 10வது கடைசி எபிசோடு இந்த வாரம் வெளியாகியுள்ள

நிக்சன் எவிக்சனால் ஐஷு தந்தைக்கு என்ன ஒரு சந்தோஷம்.. இன்ஸ்டா பதிவு வைரல்..!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து நிக்சன் மற்றும் ரவீனா வெளியேறப்போவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நிக்சன் வெளியேற்றம் குறித்து ஐஷு தந்தை தனது சமூக வலைத்தளத்தில்

2 மாநிலங்களில் மட்டும் 'அயலான்', 'கேப்டன் மில்லர்' ரிலீஸ் இல்லையா? என்ன காரணம்?

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' மற்றும் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்