இந்த கோபத்தை அரசியல்வாதிகளிடம் காட்டுங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்

  • IndiaGlitz, [Monday,August 28 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் அரசியல் குறித்து மறைமுகமாகவும், நேரடியாகவும் பேச தவறுவதில்லை என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்ததே. இந்த நிலையில் நேற்றும் கமல்ஹாசன் அரசியல்வாதிகள் குறித்து சில கருத்துக்களை கூறினார்.

ஜூலி பொய் கூறினார் என்பதற்காக ஆத்திரப்படும் பொதுமக்கள் ஏன் பொய்யை மட்டுமே கூறி வரும் அரசியல்வாதிகள் மீது கோபப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பினார். குண்டர் சட்டத்தில் உள்ளே செல்ல வேண்டியவர்கள், அப்பாவிகள் மீது குண்டர் சட்டத்தை திணிப்பதாகவும், அரசியல்வாதிகள் மீதான கோபத்தை பாதுகாத்து வைத்திருந்து சமயம் வரும்போது வெளிப்படுத்துங்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஜூலி, காயத்ரி போன்றோர் நம்மில் ஒருவர் என்றும், அவர்கள் மீது இந்த அளவுக்கு அதிகப்படியான வெறுப்பை வெளிப்படுத்த அவசியமில்லை என்றும், அவர்களை தாராளமாக மன்னிக்கலாம் என்றும் கூறிய கமல், அவர்கள் அப்படியும் திருந்தவில்லை என்றால் திருந்தும் வரை தொடர்ந்து மன்னித்து கொண்டே இருங்கள் என்றும் பார்வையாளர்களுக்கு கமல் வேண்டுகோள் வைத்தார்.

More News

'விவேகம்' படத்திற்கு ஏன் இத்தனை நெகட்டிவ் விமர்சனங்கள்

கோலிவுட் திரையுலகில் வெளியாகும் படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது, குத்தாட்ட பாடல், நாயகியின் கவர்ச்சி உடை, கெட்ட வார்த்தைகள் ஆகியவை அனைத்தும் அல்லது இவற்றில் சில இல்லாமல் படம் வெளியாகுவது மிகவும் அரிதாக உள்ளது...

இன்று கமல் வெளியிடும் குறும்படம் ஆரவ்வின் மருத்துவ முத்தமா?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு ஆரவ் கொடுத்த மருத்துவ முத்தம் குறித்து அனைவரும் அறிந்ததே...

விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் பட்டையை கிளப்பி வருகின்றன...

பிக்பாஸ் கோர்ட்டில் அரசியல்வாதிகளை மறைமுகமாக தாக்கிய கமல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது...

நெகட்டிவ் விமர்சனத்தை மீறி 2வது நாளில் சாதனை செய்த 'விவேகம்'

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் வெளியாகியது.