உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு கமல் கொடுக்கும் மிகப்பெரிய தொகை!

  • IndiaGlitz, [Thursday,February 20 2020]

உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் பிரமாண்டமான திரைப்படமான ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு இந்த படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற விபத்து ஒன்றில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

இந்த நிலையில் கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் அனைவரும் மறைந்த 3 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் தற்போது ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு ரூபாய் ஒரு கோடி நிதியுதவி அளிக்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் அஞ்சலி செலுத்த கமலஹாசன் மற்றும் லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் ஆகியோர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு இன்று வருகை தந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசியதாவது:

’இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடந்த விபத்தை எனது குடும்பத்தில் நடந்ததாகவே நான் கருதுகிறேன். சினிமா துறையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது. படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு ரூபாய் நிதி ஒரு கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்றும் கமலஹாசன் தெரிவித்தார். கமல்ஹாசன் இந்த அறிவிப்பு மறைந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு ஒரு சிறிய ஆறுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சொந்த சூனியம், முட்டாள் கூட்டம்: 'இந்தியன் 2': மறைந்த கிருஷ்ணாவின் குடும்ப நண்பர் ஆவேசம்

கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் நடந்த கோர விபத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா உள்பட மூவர் பரிதாபமாக பலியான சம்பவம்

'கேம் ஓவர்' இயக்குனரின் அடுத்த படத்தில் சமந்தா? ஹீரோ யார் தெரியுமா?

நடிகை டாப்ஸி நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'கேம் ஓவர்' இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது இயக்குனர் அஸ்வின் சரவணன்

இருக்கவே இருக்கு 'யூடியூ': 'திரெளபதி இயக்குனர் அதிரடி

ஜி மோகன் இயக்கிய 'திரெளபதி திரைப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியான நிலையில் இந்த டிரைலர் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கார்த்தியின் அடுத்த பட தயாரிப்பாளர், இயக்குனர் குறித்த தகவல்

நடிகர் கார்த்தி கடந்த ஆண்டு 'தேவ்', கைதி' மற்றும் 'தம்பி' ஆகிய 3 படங்களில் நடித்த நிலையில் இந்த ஆண்டு அவர் சுல்தான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இனியும் நடக்கக்கூடாது இதுபோன்ற ஒரு விபத்து: தனுஷ்

நேற்றிரவு 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் நடந்த கோர விபத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா உள்பட மூவர் பரிதாபமாக பலியான சம்பவம் படக்குழுவினர்களை மட்டுமின்றி