close
Choose your channels

'ஆண் தேவதை' கவினுக்கு வாழ்த்து கூறிய கமல்

Tuesday, October 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான இயக்குனர் தாமிராவின் 'ஆண் தேவதை' திரைப்படத்திற்கு ஊடகங்களின் பாராட்டுக்கள் கிடைத்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக சமுத்திரக்கனியின் குழந்தைகளாக நடித்த இரண்டு குழந்தை நட்சத்திரங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த கவின் என்ற குழந்தை நட்சத்திரத்தை நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது கவினின் பெற்றொர்களும் உடனிருந்தனர்.

குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய கமல், இன்னொரு குழந்தை நட்சத்திரத்தை பாராட்டியது பொருத்தமாக கருதப்படுகிறது.

கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்ற கவினின் புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.