close
Choose your channels

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: தங்கம் வென்ற பிவி சிந்துவுக்கு கமல் வாழ்த்து

Monday, August 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாறு சாதனையை நிகழ்த்தியுள்ள இந்திய வீராங்கனை பி.வி சிந்துவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் நசோமி ஒகுஹாரவுடன் மோதினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய பிவி சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை தங்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

பி.வி.சிந்து தங்கம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் இது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்தியுள்ளார். `பி.வி சிந்துவால் மீண்டும் இந்தியா பெருமையடைகிறது. பேட்மிண்டன் வெற்றிக்கு வாழ்த்துகள். இளம்தலைமுறையினருக்கு பி.வி சிந்துவின் வெற்றி முன்னுதராணமாக இருக்கும் என்று பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகளவில் வலிமைக்கும், திறமைக்கும் கிடைத்த உண்மையான வெற்றி என்றும் நமது மகளை கொண்டாடுவோம் என்றும் பி.வி.சிந்துவை நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.