யூத் ஒலிம்பிக்: வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு கமல் பாராட்டு

  • IndiaGlitz, [Friday,October 19 2018]

இளைஞர்களுக்கான யூத் ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

நேற்று நடந்த மும்முறை தாண்டும் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ப்ரவீண் சித்திரவேல் என்ற இளைஞர் வெண்கலப்பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார்

இந்த நிலையில் சித்திரவேலுக்கு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் நடிகரும், அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'மும்முறை தாண்டும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற தஞ்சையைச் சேர்ந்த திரு.பிரவீன் சித்ரவேலிற்கு பாராட்டுக்கள். தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!' என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்த பின்னர்தான் பலருக்கு ஒரு தமிழர், யூத் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்று 'சர்கார்' தினம்: மெர்சல் ஆகும் சமூக வலைத்தளங்கள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதை இன்று காலை முதலே விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களை மெர்சலாக்க தொடங்கிவிட்டனர்

வடசென்னை - விடுபட்டுவிடக்கூடாத பதிவு

வடசென்னை - திரை விமர்சனம்

சிம்புதேவனின் அடுத்த படத்தில் ஆறு ஹீரோக்கள்

விஜய் நடித்த 'புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன் அடுத்ததாக வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தை இயக்கி வந்தார்.

மூடிட்டு போ! டுவிட்டர் பயனாளியை திட்டிய சின்மயி

கடந்த சில நாட்களாக வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைத்தளமான டுவிட்டரில் விவாதம் நடந்து வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் மீண்டும் இணையும் சிம்புவின் மேஜிக் கூட்டணி

சிம்பு நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணை தாண்டி வருவாயோ' திரைப்படம் காதலர்களுக்கு ஒரு மறக்க முடியாத படம்.