இந்து தீவிரவாதம் பேச்சு: முன் ஜாமீன் மனுதாக்கல் செய்த கமல்

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்து தீவிரவாதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் நேற்று அவர் மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதனால் கமல்ஹாசன் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன் ஜாமீன் கோரி, கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக தன் மீதான் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவசர வழக்காக இதனை விசாரிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி முன், கமல் சார்பில் முறையிடப்பட்டது.

ஆனால் தற்போது நீதிமன்றம் விடுமுறையில் இருப்பதால் தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும், மனுதாரர் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தால், அதனை பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து கமல் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்து தீவிரவாதி என நான் பேசியது சரித்திர உண்மை: கமல்ஹாசன்

சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததோடு,

கமல்ஹாசனை வெளியே நடமாட விடமாட்டோம்: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை 

தொடர்ச்சியாக இந்து விரோத பேச்சை கடைபிடித்து வரும் கமல்ஹாசனை வெளியே நடமாட விடமாட்டோம் என மன்னார்குடி ஜீயர் கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதல்முறையாக சேரன் படத்திற்கு கிடைத்த சான்றிதழ்?

இயக்குனர் சேரன் தான் இயக்கிய முதல் படமான 'பாரதி கண்ணம்மா' படம் முதல் சமீபத்தில் வெளியான 'திருமணம்' வரை அனைத்து படங்களும் சென்சாரில் 'யூ' சான்றிதழை பெற்றுள்ளதாகவும்,

பிக்பாஸ் 3: அட்டகாசமான அதிகாரபூர்வ அறிவிப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும், இதற்கான புரமோ படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தது

'தல 60' படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்!

அஜித் நடித்து முடித்துள்ள 59வது திரைப்படமான 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில்