close
Choose your channels

'சைரா நரசிம்மரெட்டி' படத்தில் இணைந்த கமல்ஹாசன்

Saturday, September 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த ‘சைரா நரசிம்மரெட்டி’ என்ற பிரமாண்டமான திரைப்படம் வரும் அக்டோபரில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது

அந்த வகையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் ராம்சரண் தேஜா, ‘சைரா நரசிம்மரெட்டி’ படத்திற்காக உலக நாயகன் கமல்ஹாசன் மூன்று நிமிடங்கள் படத்தின் அறிமுகம் குறித்து குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதேபோல் தெலுங்கில் பவன்கல்யாணும், மலையாளத்தில் மோகன்லாலும் அறிமுகக்குரல் கொடுத்துள்ளதாகவும் இவர்கள் மூவருக்கும் தனது நன்றிகள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை தான் ஒரு தெலுங்கு மொழி படமாக பார்க்கவில்லை என்றும் இதுவொரு இந்திய திரைப்படம் என்றும் ராம்சரண் தெரிவித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.