கமல்-அமலா படத்தின் தமிழ் டைட்டில்

  • IndiaGlitz, [Wednesday,November 25 2015]

தூங்காவனம்' படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு தெலுங்கில் 'அம்மா நானா ஆட்டா' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் டைட்டிலும் தற்போது வெளிவந்துள்ளது.

பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ள இந்த படத்தில் கமல், அமலா, ஜரீனா வாஹப் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கு 'அம்மா அப்பா விளையாட்டு' என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் மலையாளம் மற்றும் இந்தி டைட்டில் விரைவில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

'சாணக்யன்' படத்திற்கு பின்னர் 26 வருடங்கள் கழித்து மலையாளத்தில் கமல் நடிக்கவுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் அமெரிக்காவில் தொடங்கவுள்ளது.

More News

காதலர் தினத்தில் வெளிவரும் விஜய்சேதுபதியின் காதல் படம்

விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்த 'சூது கவ்வும்' படத்தை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமியின் இரண்டாவது படமான 'காதலும் கடந்து ...

விஜய் 60' படத்தில் இணைந்த 'கத்தி' நடிகர்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்திற்கு இணையாக விரைவில் தொடங்கவுள்ள 'விஜய் 60' படம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது...

'விஜய் 59' டைட்டில் குறித்த புதிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நாளை நள்ளிரவு 12 மணிக்கு...

'கத்தி'க்கு பதில் கவுண்டமணிக்கு தாவுகிறாரா சிரஞ்சீவி?

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான கவுண்டமணியின் ரீஎண்ட்ரி படமான '49ஓ' திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களின் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக...

'செல்பி புள்ளே' பாடகிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

விஜய் நடித்த 'கத்தி' திரைப்படத்தில் 'செல்பி புள்ளே' என்ற பாடலை விஜய்யுடன் இணைந்து பாடிய பாடகி சுனிதி செளகான்...