தொடங்கிவிட்டது 'விஸ்வரூபம் 2' பணிகள். கமல் ரசிகர்கள் குஷி

  • IndiaGlitz, [Thursday,April 20 2017]

உலக நாயகன் கமல்ஹாசனின் சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று 'விஸ்வரூபம்'. தடைகள் பல தாண்டி கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இந்த படம் உலக அளவில் வசூலை குவித்து ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.

இந்த நிலையில் விஸ்வரூபம் படத்தின்போதே அதன் இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை கமல்ஹாசன் முடித்துவிட்டார். இருப்பினும் பல்வேறு பொருளாதார சிக்கல் காரணமாக இந்த படத்தின் பணிகள் காலதாமதம் ஆனது.

தற்போது கமல் ரசிகர்களுக்கு குஷியான செய்தியாக 'விஸ்வரூபம் 2' படத்தின் போஸ்ட் புரொக்சன்ஸ் பணிகள் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. முதல்கட்டமாக சென்னையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு கமல் நடித்த 'தூங்காவனம்', 'உத்தமவில்லன்' மற்றும் பாபநாசம் ஆகிய மூன்று படங்கள் வெளியானது. ஆனால் அதன் பின்னர் கமலை திரையில் பார்க்காமல் ஏக்கம் அடைந்துள்ள அவரது ரசிகர்களுக்கு மிக விரைவில் விஸ்வரூபம் 2 வடிவில் விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தமிழ் இயக்குனர்

'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கெளரவ் நாராயணன் தற்போது உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

விவாகரத்தான நடிகையுடன் ஜோடியாக சுற்றும் இளம் நடிகர்

பிரபல நடிகரும், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் முதல் மனைவி மகனுமான அர்ஜூன் கபூர், கடந்த சில நாட்களாக பிரபல நடிகை மலாய்க்கா அரோராவுடன் லிவிங் ரிலேஷனில் இருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தொடர்பு காரணமாக போனிகபூர் கடும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.

இனி ஆண்டுக்கு 600 மணி நேரம் மிச்சமாகும். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு கடந்த சில மாதங்களாக சோதனை தரும் மாதங்களாக இருந்து வருகிறது. மாடிப்படிகளில் இருந்து கீழே விழுந்து ஏற்பட்ட எலும்பு முறிவு, கவுதமியின் பிரிவு, சமீபத்தில் அவருடைய வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஆகியவை அவருக்கு ஏற்பட்ட சோதனைகளில் சில. இதுதவிர சில அரசியல்வாதிகளிடம் இருந்து வரும் சோதனைகள் தனி!

கர்ப்பமான நிலையிலும் கோப்பையை வென்றாரா செரீனா வில்லியம்ஸ்?

உலகின் நம்பன் ஒன் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையும் டென்னிஸ் உலக சூப்பர் ஸ்டாருமான செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாகியுள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. அவர் இந்த ஆண்டில் உள்ள டென்னிஸ் தொடர்களில் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...

சூடு பிடித்தது சமுத்திரக்கனியின் 'தொண்டன்' வியாபாரம்

சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன நிலையில் அவர் இயக்கி நடித்துள்ள அடுத்த படம் 'தொண்டன்.