கமல் அறிவிப்பு எதிரொலி: காணாமல் போன அமைச்சர்களின் இமெயில்கள்

  • IndiaGlitz, [Friday,July 21 2017]

தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை நடிகர் கமல்ஹாசன் முன்வைத்தபோது 'இவரெல்லாம் ஒரு ஆளா? என்று கேட்ட அமைச்சர்கள் இன்று அவருடைய ஒரே ஒரு அறிக்கைக்கு பயந்து தங்களுடைய இணையதள முகப்பு பக்கங்களில் இருந்த இ-மெயில் முகவாிகளை அழித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஊழல் நடந்ததற்கு ஆதாரம் காட்டுங்கள் என்று அமைச்சர்கள் சிலர் கூறியபோது அதற்கு கமல், இது டிஜிட்டல் உலகம், எனவே முறைகேடுகளை இமெயில் மூலம் அந்தந்த துறைக்கு அனுப்புங்கள்' என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களின் இ-மெயில் முகவாிகளும் அவர்களுடைய இணையதளங்களில் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரு சிலாின் தொலைபேசி எண்களையும் காணவில்லை.
இந்த விஷயத்தை கமலுக்கு கிடைத்த முதல் வெற்றியாக நெட்டிசன்களும் கமல் ஆதரவாளர்களும் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் அமைச்சர்களின் இமெயில்கள் அவர்களுடைய இணையதளத்தில் இல்லாவிட்டாலும் “http://www.assembly.tn.gov.in/15thassembly/honcm.html“ இந்த தளத்தில் அனைத்து எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் இமெயில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓவியாவை ஓரம்கட்ட கபடி டீம் காரணமா? அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று 'தமிழ் தலைவாஸ்' கபடி அணியினர் வருகை தந்து கபடி விளையாடினர் என்பது தெரிந்ததே.

பரணியை அடுத்து ஓவியாவை ஓரங்கட்டும் பிக்பாஸ் குடும்பம்

பிக்பாஸ் குடும்பத்தில் உள்ள 15 பேர்களும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக இருப்போம் என்று முதல் நாள் வாக்குறுதி அளித்தாலும், அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டனர் என்பது அடுத்தடுத்து அவர்கள் நடந்து கொள்ளும் விதத்திலேயே தெரிந்துவிட்டது.

இன்று மாலை 6 மணிக்கு 'மெர்சல்' ஆடிவெள்ளி கொண்டாட்டம்

ஆடிமாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் தமிழர்கள் புனிதமான நாளாக கருதி வரும் நிலையில் அந்த நாள் இன்று என்பது அனைவரும் அறிந்ததே.

அரசியலுக்கு தீபா ஆசைப்படும்போது, கமல் ஆசைப்படக்கூடாதா? நல்லக்கண்ணு

கமல்ஹாசன் அவருண்டு, அவருடைய உயிர் மூச்சான சினிமா உண்டு என்று இருந்த நிலையில் அவரை தேவையில்லாமல் ஒருசில அரசியல்வாதிகள் சீண்டிவிட்டதால் தற்போது விஸ்வரூபம் எடுத்து ஆட்சியாளர்களின் சிம்ம சொப்பனமாக மாறியுள்ளார்...

எல்லாமே ஸ்கிரிப்ட் படிதான் உள்ளே நடக்குது! பிக்பாஸ் உண்மையை பிட்டு வைத்த கஞ்சாகருப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்த முதல் நாளே சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்ச்சி உண்மையான ரியாலிட்டி ஷோ இல்லை, இதுவொரு ஸ்கிரிப்ட் எழுதப்பட்ட சீரியல் என்று பலர் சமூக வலைத்தளங்களில் கூறினர். நாள் ஆக ஆக இது உண்மையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது...