கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு

  • IndiaGlitz, [Friday,March 24 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதிகாசங்களில் ஒன்றாகிய மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக வள்ளியூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆதிநாத சுந்தரம் என்பவர் சமீபத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று கும்பகோணம் மாவட்ட நீதிமன்றத்தில் அதே காரணத்திற்காக மேலும் ஒரு வழக்கு இன்று தொடரப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் கும்பகோணம் மாவட்டச் செயலாளர் பாலா இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,.
ஏற்கனவே கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வன்முறையை தூண்டி வரும் கருத்துக்களை பதிவு செய்து வருவதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் சென்னை காவல்துறையினர்களிடம் அரசியல் கட்சி ஒன்று புகார் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கூடாரத்தை ஒரேயொரு அறிவிப்பில் காலி செய்த கருணாஸ்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது.

'கடுகு' இயக்குனருக்கு பிரபல இயக்குனர் எழுதிய உணர்வுபூர்வமான கடிதம்

'கோலி சோடா', 10 எண்றதுக்குள்ள' ஆகிய படங்களின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கிய அடுத்த படமான 'கடுகு' இன்று வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளது

அருள்நிதியின் புதிய படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அருள்நிதி நடித்த 'ஆறாது சினம்' கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் 'இரவுக்கு ஆயிரம் கணகள் என்ற படத்தில் நடித்து வருகிறார்....

எழுத்தாளர் அசோகமித்ரன் மறைவு. கமல் உள்பட பிரபலங்கள் இரங்கல்

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் அசோகமித்ரனின் மறைவு தமிழ் எழுத்துலகம் மட்டுமின்றி திரையுலகத்தையும் அதிர்ச்சி அளித்துள்ளது. கமல்ஹாசன் உள்பட பல திரையுலகினர்களும் அசோகமித்ரனின் எழுத்துக்கு வாசககர்களாக இருந்தனர்...

இந்தியாவில் 6500 திரையரங்குகளில் வெளியாகும் முதல் திரைப்படம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் சாதனை செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...