கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Friday,September 01 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை சந்திக்கவுள்ளார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன்னர் கேரள முதல்வரின் வீட்டிற்கு கமல்ஹாசன் சென்றார்.
கமல்ஹாசனை வீட்டின் வாசல் வரை வந்து முதல்வரின் குடும்பத்தினர் இன்முகத்துடன் வரவேற்றனர். கமல்ஹாசனுக்கு கைகொடுத்து வரவேற்ற முதல்வர் பினராயி விஜயன் அவரை வீட்டின் உள்ளே அழைத்து சென்றார்.
இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கமல் தரப்பில் கூறப்படுகிறது. விரைவில் அரசியல் கட்சியை கமல் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் முதுபெரும் அரசியல்வாதி பினராயி விஜயனை கமல் சந்தித்திருப்பது பெரும் ஊகங்களுக்கு இடமளித்துள்ளது

More News

நீட் காரணமாக மருத்துவ சீட் கிடைக்காத மாணவி தற்கொலை

மருத்துவ படிப்புக்கான நாடு தழுவிய நீட் தேர்வு பலருடைய மருத்துவ கனவை தகர்த்தெறிந்துவிட்டது.

ஃபெப்சி வேலைநிறுத்தத்திற்கு காரணமான விளம்பரம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபெப்சி அமைப்பினர் வேலைநிறுத்தத்தை அறிவித்தபோது ரஜினிகாந்த் உள்பட பலரது முயற்சியால் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது...

'விவேகம்' படத்திற்கு வைரமுத்துவின் விமர்சனம் இதுதான்

அஜித்தின் 'விவேகம்' படத்திற்கு நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்த நிலையில் கவியரசு வைரமுத்து நேற்று தனது குடும்பத்துடன் 'விவேகம்' படம் பார்த்தார்...

அஜித்தின் 'வீரம்' இந்தி ரீமேக் படத்தின் டைட்டில் அறிவிப்பு

அஜித், தமன்னா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'வீரம்' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரிஜினல் லைசென்ஸ் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி கருத்து

வாகனங்கள் ஓட்டுபவர்கள் இன்று முதல் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ரூ.500 அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது...