close
Choose your channels

மீண்டும் வெள்ளித்திரையில் இணையும் கமல்-பிரபு

Tuesday, March 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஹிட்டான பழைய படங்கள் டிஜிட்டல் வெர்ஷனில் மீண்டும் ரிலீஸ் ஆகி புதிய படங்களுக்கு இணையாக வெற்றி பெற்று வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பாட்ஷா' இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு

அந்த வகையில் கடந்த 1989ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இளையதிலகம் பிரபு இணைந்து நடித்த மெகா ஹிட் படமான 'வெற்றி விழா' திரைப்படம் தற்போது டிஜிட்டல் வெர்ஷனில் தயாராகி வருகிறது. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், மிக விரைவில் பாட்ஷாவுக்கு இணையாக பெரும்பாலான திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பு, சசிகலா, சலீம் கவுஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சிவாஜி புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரதாப் போத்தன் இயக்கிய இந்த படம் த்ரில் மற்றும் ஆக்சன் படம். வெள்ளித்திரையில் மீண்டும் கமல்-பிரபுவை பார்க்க இருதரப்பு ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.