ரஜினியுடன் கூட்டணி: சமிக்ஞை காட்டிய கமல்

  • IndiaGlitz, [Thursday,January 25 2018]

கோலிவுட் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியலுக்கு தனித்தனி கட்சிகள் ஆரம்பித்து வரவுள்ளனர். இருவருக்கும் இடையில் அடிப்படையிலேயே வேற்றுமை இருப்பதால் தனித்தனியாக கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் பகுத்தறிவு பாதையிலும், ரஜினிகாந்த் ஆன்மீக பாதையிலும் தங்கள் அரசியல் பயணத்தை தொடரவுள்ளனர்.

இருப்பினும் இருவருக்கும் தமிழக மக்களின் நலன் மற்றும் ஊழல் ஒழிப்பு என்ற குறிக்கோள்கள் இருப்பதால் தேர்தல் நேரத்தில் இருவரும் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

சமீபத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து அரசியல் செய்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, 'காலம் தான் அதை தீர்மானம் செய்யும்' என்றார். இந்த கருத்தை கமலும் ஆமோதித்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் கமல் பேட்டியளித்தபோது, 'தமிழக மக்களை மேம்படுத்த எத்தகைய எதிர்ப்புகளையும் நானும் ரஜினிகாந்தும் இணைந்து எதிர்கொள்வோம்' என்று கூறினார். இது ரஜினியுடன் அவர் கூட்டணி அமைக்க தெரிவித்த சம்மதத்தின் சமிக்ஞயாகவே கருதப்படுகிறது. கமல், ரஜினி கூட்டணி சேர்ந்து இந்த கூட்டணியை கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஆதரவு அளித்தால் தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

More News

நான் எம்.எல்.ஏ-க்களை விட அதிகமாக சம்பாதிப்பவன்: விஷால்

சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷாலும் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருடைய மனு முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டது.

ஸ்ரீதேவியை கட்டியணைத்து மலரும் நினைவுகளில் மூழ்கிய கமல்

இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் விருது விழா மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது: கமல்ஹாசன்

கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது என்றும், சில பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது; செய்துதான் காட்ட முடியும்.

'பத்மாவத்' பிரச்சனை குறித்தும் சித்தார்த்தும், சித்தார்த் அபிமன்யூவும் கூறிய கருத்து

தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் நடிப்பில் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பத்மாவத்' திரைப்படம் பெரும் சர்ச்சைகளுக்கு பின் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உடுமலை சங்கர் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி திடீர் மரணம்

நீதிபதி அலமேலு நடராஜன் அவர்களுக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.