வெல்வது யார்? மக்களின் மந்திரமா? சொக்கனின் தந்திரமா? கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

உலக நாயகன் கமல்ஹாசனின் சமீபத்திய சமூக வலைத்தள பதிவுகள் அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களாலும் வரவேற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்னும் சில நிமிடங்களில் கோரவுள்ள நிலையில் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வழக்கம்போல் ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில் 'இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்' என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே கமல்ஹாசன் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

தனுஷ் படத்தில் ஒரே ஒரு வினாடி மட்டுமே நடித்த பிரபல நடிகர்

தனுஷ் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து கொண்டும், 'பவர் பாண்டி' என்ற படத்தை இயக்கியும் வருகிறார்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷால் உதவி

நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால், அவ்வப்போது நலிந்த நடிகர்களுக்கும், பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கும் தனது தேவி அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருவதை அவ்வப்போது பார்த்துள்ளோம்.

சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள மைத்ரேயன் எம்பி தலைமையில் தேர்தல் ஆணையத்திடம் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கூவத்தூர் எம்.எல்.ஏக்கள் சொல்லி கொடுத்ததை சரியாக சொல்கிறார்கள். பார்த்திபன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஆதரவு என கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களில் ஒருசிலர் தொலைக்காட்சியில் பேட்டி அளித்து வருகின்றனர்.

குண்டர் சட்டத்தில் ஒரு மாதம் சிறையில் அடையுங்கள். முதல்வருக்கு சுப்பிரமணியன்சுவாமி கோரிக்கை

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழர்களை பொறுக்கி என்று கூறி வாங்கிக்கட்டி கொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் சசிகலாவைத்தான் முதல்வர் பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை கிளப்பியதோடு, கவர்னருக்கு எதிராக வழக்கு தொடுப்பேன் என்றும் அறிவித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.