close
Choose your channels

'இந்தியன் 2': கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு!

Monday, May 10, 2021 • தமிழ் Comments

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வந்த ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் நடைபெறாமல் உள்ளது. இதை அடுத்து ஷங்கர், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தெலுங்கு திரைப்படத்தை இயக்குவதற்காக சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தங்கள் படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க கூடாது என நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் ஜூன் மாதம் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சுமூகமாக நடைபெற கமல்ஹாசன் அதிரடி முடிவு எடுத்துள்ளார். இதனை அடுத்து அவர் தயாரிப்பாளர் தரப்பிடமும் ஷங்கர் தரப்பிடமும் தனித்தனியாக பேசி உள்ளதாகவும் விரைவில் இரு தரப்பினரையும் ஒன்றாக இணைத்து பேச்சுவார்த்தை நடத்தி ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க அவர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் ஷங்கர் மீண்டும் இணைந்துள்ள ‘இந்தியன் 2’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த ஆண்டுக்குள் இந்த படத்தை முடித்து வெளியிட வேண்டும் என கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன், காஜல்அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் கமல்ஹாசன் முயற்சியால் படப்பிடிப்பு தொடங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Get Breaking News Alerts From IndiaGlitz