'இந்தியன் 2' படப்பிடிப்பு குறித்த அசத்தலான தகவல்

  • IndiaGlitz, [Thursday,January 30 2020]

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் கமலஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்ததால் அவர் கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார். இருப்பினும் கமலஹாசன் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் பிப்ரவரி முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதில் கமலஹாசன் மற்றும் பிரியா பவானிசங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் கமலஹாசன் மீண்டும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதால் படக்குழுவினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்காக தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்டு வரும் காஜல் அகர்வாலும் இந்த படப்பிடிப்பு கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்திசிங், ப்ரியா பவானிசங்கர், விவேக், கிஷோர் ,வித்யுத் ஜம்வால், சமுத்திரகனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
 

More News

வீகன் (சைவ உணவு) டயட் உணவு முறை –  மாற்று உணவு வகைகள், எளிய வழி முறைகள்

நாம் உண்ணும் உணவுகளே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் ஆகிவிடுகிறது என மருத்துவர்கள் தற்போது எச்சரித்து வருகின்றனர்

ரஜினியின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' குறித்து டிஸ்கவரி வெளியிட்ட அறிக்கை

அகில உலக அளவில்‌ புகழ்‌ பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம்‌, சூப்பர்ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ உடன்‌ தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில்‌ 'மேன் வெர்சஸ் வைல்ட்

ரோஹித்தின் இரண்டு சிக்ஸர்களை நம்பவே முடியவில்லை: பிரபல நடிகர் டுவீட்

இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் எதிர்பாராத வெற்றி குறித்து பிரபல நடிகர் தனது டுவிட்டரில் டுவீட் செய்துள்ளார்.

குழந்தைகள் ஆபாச படவிவகாரம்: சென்னை இளைஞர் அதிரடி கைது!

குழந்தைகள் ஆபாசப் படத்தைப் பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ கைது செய்யப்படுவார்கள் என ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்

LKG-க்கே தேர்வு நடக்கிறது.. சிறப்பு பயிற்சி கொடுங்கள்..! பொதுத் தேர்வு கேள்விக்கு செங்கோட்டையன் பதில்.

எல்கேஜிக்கே நுழைவுத் தேர்வு எனும்போது 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தக் கூடாதா? ஏழை மாணவர்களின் கல்வித் தரம் உயர பொதுத் தேர்வு அவசியம்