அக்சராஹாசனுடன் 'விவேகம்' படம் பார்த்த கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Thursday,August 24 2017]

அஜித்தின் 'விவேகம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த விமர்சனங்கள் திருப்தி அளிக்கும் வகையில் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை இன்று மகள் அக்சராஹாசனுடன் பார்த்ததாக சமூக வலைத்தளத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.

அக்சராஹாசனின் முதல் தமிழ்ப்படமான 'விவேகம்' படத்தில் நடித்த அஜித் உள்பட படக்குழுவினர்கள் அனைவருக்கும் அவர் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'விவேகம்' படத்தை மகள் அக்சராஹாசனுடன் பார்த்து கொண்டிருக்கின்றேன். நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு.அஜித் முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்' என்று கமல் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

More News

டுவிட்டர் ஹேஷ்டேக்கிற்கு இன்று 10வது பிறந்த நாள்

டுவிட்டரில் எதற்கெடுத்தாலும் # என்னும் ஹேஷ்டேக் செய்வது கடந்த சில வருடங்களாக டிரெண்ட் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த ஹேஷ்டேக்கிற்கு இன்று 10 வயது ஆகிறது

சசிகலா சீராய்வு மனு: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா, இந்த வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்....

விவேகம்: தமிழ் சினிமாவின் முதல் சர்வதேச த்ரில்லர் படம். சிவா

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் நடிப்பில் சிவா இயக்கத்தில் சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தின் முதல் காட்சி இன்னும் சற்று நேரத்தில் திரையிடப்பட உள்ளது.

யுவன்ஷங்கர் ராஜா பிறந்த நாளில் அஞ்சலி படக்குழுவினரின் அதிரடி கொண்டாட்டம்

இளம் இசைஞானி யுவன்ஷங்கர் ராஜாவின் பிறந்த நாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வருவதை அடுத்து அவர் இசையமைத்துள்ள 'பலூன்' படக்குழுவினர் அன்றைய தினம் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்...

ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றி பட இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். நடிப்பு மட்டுமின்றி இசைத்துறையிலும் ஈடுபட்டு வரும் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே 'அடங்காதே', '4G', 'ஐங்கரன்', 'நாச்சியார்', 'செம', '100% காதல்', போன்ற படங்களில் நடித்து வருகிறார்...