close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'விக்ரம்' படத்தை புரமோஷன் செய்த கமல்ஹாசன்: செம வரவேற்பு

Sunday, May 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிக்காக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவரும் கமல்ஹாசன், ஒருசில வெளிநாடுகளுக்கும் சென்று புரமோஷன் செய்து வருகிறார்

இந்த நிலையில் பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், ‘விக்ரம்’ படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது புரமோஷன் செய்தார். பிக்பாஸ் மலையாளம் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த மூன்று சீசன்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நான்காவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டது போட்டியாளர்களுக்கும் சரி, பார்வையாளர்களுக்கு சரி இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் மோகன்லாலுடன் உரையாடிய கமல்ஹாசன் ‘விக்ரம்’ படம் குறித்தும் சில விஷயங்களை கூறினார். மேலும் இந்த படத்தின் டிரைலரும் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டதை அடுத்து இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.