'கமல்ஹாசன் 232' போட்டோஷூட்: நவம்பர் 7ல் விருந்து கிடைக்குமா?

  • IndiaGlitz, [Friday,October 30 2020]

உலகநாயகன் கமல்ஹாசனின் 232ஆவது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இருப்பினும் இந்த படத்தின் போட்டோஷுட் சமீபத்தில் நடந்ததாகவும் பிக்பாஸ் கெட்டப்பிலேயே அவரது போட்டோஷூட் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த போட்டோஷூட்டின் ஒரு சில புகைப்படங்கள் மட்டும் சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் அதே தாடியில் கமலஹாசன் அட்டகாசமாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் வரும் நவம்பர் ஏழாம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் வரவிருப்பதை அடுத்து இந்த போட்டோஷூட்டின் இன்னும் ஒரு சில புகைப்படங்கள் அதிகாரபூர்வமாக வெளிவரலாம் என்றும் அதுமட்டுமின்றி ’கமலஹாசன் 232’ படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

கமல்ஹாசன் தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு போட்டோஷூட் விருந்து அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்