close
Choose your channels

கமல்ஹாசன் - அன்பறிவ் படத்தின் புரமோ வீடியோ.. இன்று என்ன ஸ்பெஷல்?

Sunday, May 11, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இரட்டையர்கள் அன்பறிவ் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், ராஜ்கமல் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

கமல்ஹாசனின் 234 வது படத்தின் புரமோ போல் தெரியும் இந்த வீடியோவில், அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் கடைசியில் அன்பறிவ் இரட்டையர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment