கமல் - எச் வினோத் படத்தில் இந்த இரண்டு பிரபலங்களா? பரபரப்பு தகவல்..!

  • IndiaGlitz, [Friday,June 30 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் ’புராஜெக்ட் கே’ என்ற படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.

மேலும் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கமல் - எச் வினோத் படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

‘விக்ரம்’ படத்தில் கமல் நாயகனாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருவரும் நண்பர்களாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு இந்த படத்தில் இணைவது குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதே சமயத்தில் ’புராஜெக்ட் கே’ படத்திலும் கமலஹாசன் அவ்வப்போது நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

More News

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட்லுக்.. ரிலீஸ் எப்போது?

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும்

லிப்-லாக், உடலுறவு காட்சிகளில் நடிப்பது? தேசிய விருது பெற்ற முக்கிய நடிகை கருத்து!

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக நடித்துவரும் நடிகை ஒருவர் லிப்-லாக் மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடிக்கவே மாட்டேன்

96-இல் நடித்த சுட்டிப் பெண்ணா இது? ஹீரோயின் போல வளர்ந்துவிட்ட வைரல் புகைப்படங்கள்!

இயக்குநர் சி.பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான ‘96‘ திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற பிரபல காமெடி நடிகை ஒருவருடைய மகள் புகைப்படம் கடந்த சில தினங்களாக

முன்னுதாரணமான நடிகர் சிவகார்த்திகேயன்… சிங்கத்தை தத்தெடுத்ததாகத் தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் சிங்கம்

போதை பொருள் வைத்திருந்ததாக பிரபல தயாரிப்பாளர் கைது.. பிரபல நடிகைக்கு தொடர்பா?

போதைப்பொருள் வைத்திருந்ததாக பிரபல தயாரிப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் பிரபல நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.