உள்ளே இருந்து நான் பார்த்துகிட்டு இருக்கேன், வெளியே அமர் பார்த்துப்பான்.. 'தக்லைஃப்' டிரைலர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக்லைஃப்’ என்ற திரைப்படம், ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியானது. தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ட்ரெய்லர் ஆரம்பத்தில், சிம்புவை சிறு வயதிலிருந்து வளர்க்கும் கமல்ஹாசன், “தனக்கு பிறகு சிம்பு தான் தனது ராஜ்ஜியத்தை ஆட்சி செய்பவர்” என்று கொண்டு வருகிறார்.
ஆனால், அதே நேரத்தில் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இருவரும் “நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?” என மோதும் நிலை உருவாகிறது. இந்த மோதலில் ஜெயித்தது யார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்று தெரிகிறது.
கமல்ஹாசன், சிம்பு ஆகிய இருவரும் போட்டி போட்டு, ஆக்ரோஷத்துடன் நடித்துள்ளனர். அதேபோல், த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய இருவருக்கும் முக்கியமான கேரக்டர்கள் இருப்பது போல் டிரைலரில் இருந்து தெரிகிறது. அபிராமி, கமல்ஹாசனின் ஜோடியாக நடித்திருப்பது போன்ற காட்சிகளும் உள்ளன.
மொத்தத்தில், இந்த டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இசைப் புயல் ஏ.ஆர். ரகுமானின் இசையில் உருவாகியுள்ள இந்த படம், நிச்சயம் 'விக்ரம்' போல இன்னொரு வெற்றிப் படமாக கமல்ஹாசனுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல, சிம்புவின் திரையுலக வாழ்க்கையிலும் இந்த படம் அவருக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
#ThuglifeTrailer Out Now
— Raaj Kamal Films International (@RKFI) May 17, 2025
➡ https://t.co/Xy1tm87OuO#Thugfluencers#ThuglifeAudioLaunch from May 24#Thuglife#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR #IMAX
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers… pic.twitter.com/rhp4PAmetE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com