உலகமே கொண்டாடும் 'சந்திராயன் 3' வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கமல், ரஜினி வாழ்த்து..!

  • IndiaGlitz, [Thursday,August 24 2023]

இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் 3 என்ற விண்கலம் நேற்று வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது என்பதும் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவை ஆய்வு செய்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வெற்றியை இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி உட்பட பலர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:

கமல்ஹாசன்: செயற்கைக்கோள் பாகங்களை சைக்கிளில் சுமந்து சென்றது முதல், நிலவில் தரை இறங்குவது வரை என்ன ஒரு பயணம். தேசத்தின் பெருமை இஸ்ரோ. நமது விண்வெளி பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள். இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

ரஜினிகாந்த்: அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா இந்த மாபெரும் சாதனையை செய்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதல்முறையாக நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 தரையிறங்கியதன் மூலம் நமது தேசம் தனது பெருமைக்குரிய அடையாளத்தை முத்திரை குத்தி உள்ளது. நீங்கள் எங்களை பெருமைப்படுத்த உள்ளீர்கள். இஸ்ரோவிற்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்’

More News

போலீஸ் மேலேயே கைவச்சிட்டியா... சுரேஷ் காமாட்சியின் 'நூடுல்ஸ்' டிரைலர்..!

சிம்புவின் 'மாநாடு' உள்பட பல வெற்றி திரைப்படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான அடுத்த திரைப்படம் 'நூடுல்ஸ்'. இந்த படம்  வரும் செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ்

தப்பு யார் செஞ்சிருந்தாலும் அவங்க தப்பானவங்க தான்.. விமலின் 'துடிக்கும் கரங்கள்' டிரைலர்..!

விமல் நடித்த 'துடிக்கும் கரங்கள்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா: இஸ்ரோவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

நிலவின் தென் துருவதற்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் சந்திராயன் 3 என்ற விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

மீண்டும் ஷங்கர் - விக்ரம் படம்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா நடிப்பில் உருவான 'அந்நியன்' திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில்

வெற்றிமாறன் இயக்கத்தில் மிஸ் ஆன கிரிக்கெட் படம்.. மீண்டும் உருவாகுமா?

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருந்த கிரிக்கெட் படம் ஒன்று மிஸ் ஆகிவிட்டதாகவும் ஆனால் இந்த படம் விரைவில் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் நடிகரும் இசையமைப்பாளருமான