close
Choose your channels

மீண்டும் இணையும் கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன்.. விரைவில் அறிவிப்பு..!

Saturday, September 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் ஏற்கனவே பல திரைப்படங்களில் இணைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த ’தேவர்மகன்’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் ’போற்றி பாடடி பெண்ணே’ என்ற பாடலின் சில வரிகள் பாடியது குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ருதிஹாசன் என்பதும், அந்த படத்தில் அவர் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து அவர் ’ஹேராம்’ உள்பட ஒரு சில கமல்ஹாசன் படங்களில் ஸ்ருதிஹாசன் பாடல்களை பாடினார். குறிப்பாக கமல்ஹாசன், மோகன்லால் நடித்த ’உன்னை போல் ஒருவன்’ என்ற திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தான் இசையமைப்பாளர் என்பதும் அந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களை ஸ்ருதிஹாசன் தான் பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு சில இசை ஆல்பங்களில் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். குறிப்பாக 'அறிவும் அன்பும்’ என்ற இசை ஆல்பத்தில் ஸ்ருதிஹாசன் பாடி உள்ளார் என்பதும் இந்த பாடலை கமல்ஹாசன் எழுத ஜிப்ரான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் உள்பட 12 பிரபலங்கள் பாடி இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு இசை ஆல்பம் உருவாக்க ஸ்ருதிஹாசன் திட்டமிட்டுள்ளதாகவும் இதில் கமல்ஹாசன் பங்கும் இருக்கும் என்று சமீபத்தில் அவர் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இந்த இசை ஆல்பம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் மீண்டும் இணையும் இந்த இசை ஆல்பத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.