கமல்ஹாசன் - லோகேஷ்  கனகராஜ் இணையும் புரொஜக்ட்.. சூப்பர் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Thursday,March 14 2024]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் மியூசிக் ஆல்பம் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் பணிபுரிய இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த ஆல்பத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சற்றுமுன் வெளியாகியுள்ள மியூசிக் ஆல்பத்தின் போஸ்டரில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் மியூசிக் ஆல்பத்தை ஸ்ருதிஹாசன் உருவாக்குவதாகவும், லோகேஷ் இந்த ஆல்பத்தில் முக்கீய பணி செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

’இனிமேல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த மியூசிக் ஆல்பத்தின் பாடலை கமல்ஹாசன் எழுத, ஸ்ருதிஹாசன் கம்போஸ் செய்து உருவாக்கும் நிலையில் துவார்கேஷ் என்பவர் இயக்கி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புவன் கவுடா ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த ஆல்பம் உருவாகி வருகிறது. பல்லவி சிங் காஸ்ட்யூமில் செளந்தர் நல்லசாமியின் கலை இயக்கத்தில் ஸ்ரீராம் ஐயங்காரின் புரடொக்சன்ஸ் டிசைனில் இந்த பாடல் உருவாகி வருகிறது.

More News

அஜித்தின் 'ஏகே 63'.. படப்பிடிப்பு தொடங்கும் நாள் முதல் ரிலீஸ் தேதி வரை மாஸ் அறிவிப்பு..!

அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'வடக்குப்பட்டி ராமசாமி' உள்பட இந்த வாரம் எத்தனை திரைப்படங்கள்? ஓடிடி ரிலீஸ் தகவல்..!

சந்தானம் நடித்த 'வடக்குப்பட்டி ராமசாமி' என்ற திரைப்படம் நாளை முதல் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த வாரம் வெளியாகும் ஓடிடி ரிலீஸ் படங்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

அடுத்தடுத்து 3 படங்களை முடித்துவிட்ட கவின்.. 46 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு..!

கவின் நடித்து வந்த 'ஸ்டார்' மற்றும் 'கிஸ்' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இன்னொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக

14 வருடங்களுக்கு பின் கேரளா செல்லும் விஜய்.. அங்கேயும் வேன் மேல் ஏறி செல்பி உண்டா?

தளபதி விஜய் 14 ஆண்டுகளுக்கு பின்னர் கேரளாவுக்கு படப்பிடிப்புக்காக செல்ல இருப்பதை அடுத்து அங்கும் ரசிகர்கள் முன்னிலையில் வேன் மேல் ஏறி செல்பி புகைப்படம் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 18 ஓடிடி தளங்கள் முடக்கம்.. தமிழ் ஓடிடி தளம் உண்டா? முழு பட்டியல்..!

ஆபாச காட்சிகள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக இந்தியாவில் 18 ஓடிடி தளங்கள் தடை செய்யப்படுவதாக மத்திய தகவல்