முன்ஜாமீனா? கைதா? கமல் மனுமீது திங்களன்று தீர்ப்பு 

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கமல்ஹாசன் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் மீது இரண்டு பிரிவுகளில் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் இருதரப்பு விசாரணையும் முடிந்துவிட்ட நிலையில் இந்த மனுவின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் கமலுக்கு முன்ஜாமீன் கிடைத்துவிட்டால் பிரச்சனை இல்லை. இல்லையே அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நாளை தமிழகத்தில் நான்கு தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தலும் வரும் 23ஆம் தேதி வியாழன் அன்று தேர்தல் முடிவும் வெளிவரவுள்ள நிலையில் 20ஆம் தேதி முன்ஜாமீன் மனுமீது என்ன தீர்ப்பு வரும் என்பதை அறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் பரபரப்புடன் காத்திருக்கின்றனர்.

More News

'இந்தியர்' அடையாளம் போதும், இந்து அடையாளம் வேண்டாம்: கமல்ஹாசன்

தேர்தல் பிரச்சாரம் சற்றுமுன் முடிவடைந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 'இந்து மதம் என்ற அடையாளம் ஆங்கிலேயர் தந்தது,

ஆர்யாவுக்கு வாழ்த்து கூறிய சூர்யா!

சூர்யாவும் ஆர்யாவும் இணைந்து நடித்த 'காப்பான்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ஆர்யாவின் படம் ஒன்றுக்கு சூர்யா இன்று தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனிருத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகிய அனிருத், முதல்முறையாக விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி ஆகியோர்களுடன் இணைந்து

2020க்கு தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்!

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இதனையடுத்து அவர் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம்,

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற பெண் மருத்துவர் பரிதாப பலி

இந்த தலைமுறையின் கலாச்சாரங்களில் ஒன்றாகிய செல்பியால் உயிரிழப்பு உள்பட பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் ஆந்திராவை சேர்ந்த பெண் மருத்துவர்